தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். அவர் இயக்கிய மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்கள் ட்ரண்ட் செட்டிங் படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.
2018 ஆம் ஆண்டே அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் பொருளாதார சிக்கல் காரணமாக ரிலீஸ் ஆகவே இல்லை. தற்போதைக்கு இயக்குனராக தமிழ் சினிமாவில் அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணம் அவரின் கடன் தொல்லைகள்தான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் மலையாள சினிமாவில் இயக்குனராகக் கால்பதித்துள்ளார். மம்மூட்டி நடித்துள்ள டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் தான் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் நான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை முதலில் மகேஷ் பாபுவுக்காகதான் எழுதினேன். ஆனால் அவர் அந்த படத்தில் நடிக்க பயந்தார். அதனால்தான் சிம்பு வைத்து எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.