அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் அதர்ஸ். இந்த படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள அதற்கு முன்பாக நடந்த பட ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், கவுரி கிஷனின் உடல் எடை குறித்து பத்திரிக்கையாளர் ஆர் எஸ் கார்த்தி என்பவர் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை மேடையிலேயே மிகவும் முதிர்ச்சியோடும் அறச்சீற்றத்தோடும் எதிர்கொண்டார் கௌரி. அதனால் அவருக்குப் பலரும் ஆதரவையும் பாராட்டுகளையும் வழங்கினர். முதலில் இந்த விவகாரத்தில் தான் தவறெதுவும் செய்யவில்லை என வாதிட்ட கார்த்தி பின்னர் நான் ஜாலியாகதான் அந்த கேள்வியைக் கேட்டேன். அதை கௌரி தவறாகப் புரிந்துகொண்டார். அவர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்” எனக் கூறினார்.
ஆனால் கார்த்தியின் மன்னிப்பை ஏற்க முடியாது என கௌரி கிஷன் கூறியுள்ளார். அதில் “செய்த தவறுக்குப் பொறுப்பேற்காம சொல்லும் மன்னிப்பு மன்னிப்பேக் கிடையாது. அதை ஏற்க முடியாது. நான் யாரையும் அவமதிக்கல. தப்பாப் புரிஞ்சிகிட்டாங்கன்னு சொல்லி தவறை மறைப்பது மோசம். அவரின் வெற்று வார்த்தைகளை நான் ஏற்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.