தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் அக்டோபர் 31, தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.
தீபாவளியை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியானாலும் அதில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மட்டுமே பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் இல்லாத மிகப்பெரிய வெற்றிப்படமாக அமரன் அமைந்துள்ளது. அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சென்ற ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 100 ஆவது நாள் விழா பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.