Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

13 படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்… ஜி வி பிரகாஷின் இந்தாண்டு முதல் ரிலீஸ் இதுதான்!

13 படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங்… ஜி வி பிரகாஷின் இந்தாண்டு முதல் ரிலீஸ் இதுதான்!

vinoth

, திங்கள், 8 ஜனவரி 2024 (08:52 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

இந்த நிலையில்,  ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் கொண்ட இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தை ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமில்லாமல் ஜி வி பிரகாஷ் நடித்து முடித்து சுமார் 13 படங்கள் ரிலீஸுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அந்த படங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரேம்ஜி அமரன் காதலிக்கும் பெண் இவர்தானா? வெளியான தகவல்!