Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எப்பதான் தொடங்கும் சிம்புவின் அடுத்த பட ஷூட்டிங்? லேட்டஸ்ட் அப்டேட்!

எப்பதான் தொடங்கும் சிம்புவின் அடுத்த பட ஷூட்டிங்? லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 18 டிசம்பர் 2023 (07:13 IST)
பத்து தல படத்துக்குப் பிறகு சிம்பு அடுத்து தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.  விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த படத்துக்கு முன் தயாரிப்புப் பணிகள் எல்லாம் இப்போது முழுவீச்சில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. படத்தின் காட்சிகள் அனைத்தையும் ஸ்டோரி போர்டாக வரையும் பணிகள் நடந்து வருவதாகவும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிரட்டலான மேக்கிங்… பயத்தைக் கொடுக்கும் டிமாண்டி காலணி 2 டிரைலர்!