Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரேம்ஜி அமரன் காதலிக்கும் பெண் இவர்தானா? வெளியான தகவல்!

பிரேம்ஜி அமரன் காதலிக்கும் பெண் இவர்தானா? வெளியான தகவல்!

vinoth

, திங்கள், 8 ஜனவரி 2024 (08:48 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், பழம்பெரும் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனுமான பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர். அதுமட்டுமில்லாமல் அவர் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.

40 வயது கடந்தும் சிங்கிளாக இருந்து வந்த பிரேம்ஜி சில வருடங்களுக்கு முன்னர் தனது காதலி என பாடகி வினைதா என்பவரை அறிமுகப்படுத்தினார். அனைவரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க பின்னர் தான் விளையாட்டுக்கு அப்படி சொன்னதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றினார்.

இந்த நிலையில், 43 வயதாகும் பிரேம்ஜி அமரனுக்கு கடந்தாண்டு திருமாணமாகும் என அவரது தந்தை கங்கை அமரன் கூறியிருந்த நிலையில், இந்த புத்தாண்டில் பிரேம்ஜி அமரன் தன் சமூக வலைதள பக்கத்தில், இவ்வருடம் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடகி வினைதாவைதான் பிரேம்ஜி அமரன் காதலிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர்களின் திருமணம் சம்மந்தமாக இயக்குனர் வெங்கட்பிரபு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கலான் ரிலீஸ் தள்ளிவைப்பா?... ஜனவரி 25 ல் பா ரஞ்சித்தின் மற்றொரு படம் ரிலீஸ்!