தலைவர் தரிசனத்துக்காக மரண வெயிட்டிங்! - ட்ரெண்டாகும் #DarbarSecondLook

புதன், 11 செப்டம்பர் 2019 (13:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும் “தர்பார்” படத்தின் செகண்ட்லுக் இன்று மாலை வெளியிடப்படுவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் “தர்பார்”. ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் முதல்படம் இது. பாட்ஷாவுக்கு பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பின் காலா படத்தில் மும்பை சார்ந்த கதைகளத்தில் நடித்தார் ரஜினி. தற்போது இந்த படமும் மும்பை சார்ந்த கதைகளம்தான் என கூறப்படுகிறது.

தர்பார் படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கிறார். நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்களிடையே படத்தின் மீது தீராத ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முகம், கொடி பறக்குது படங்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கெட் அப்பில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் பாராட்டை குவித்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட போஸ்டர் வெளியிடப்படுவதாக, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா அறிவித்துள்ளது. அதனால் இன்று காலை முதலே #DarbarSecondLook என்ற ஹேஷ்டேகுகள் சமூக வலைதலங்களில் தீயாக பரவி வருகின்றன. பலர் ரஜினி நடித்த படக்காட்சிகளை தொகுத்து ஸ்பெஷல் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் லாஸ் அப்பாவை பார்த்து மிரண்டு போன கவின் - வீடியோ!