தீபாவளி ரேஸில் விஷாலின் ‘ஆக்சன்’?

புதன், 11 செப்டம்பர் 2019 (20:16 IST)
வரும் தீபாவளி தினத்தில் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படமும், கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படமும் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியின் ’சங்கத்தமிழன்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் தீபாவளி தினத்தில் விஜய் மற்றும் கார்த்தி படங்கள் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் விஷாலின் ’ஆக்சன்’ திரைப்படத்தையும் தீபாவளி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. இருப்பினும் இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஷாலின் ’ஆக்சன்’திரைப்படத்தின் டீசர் வரும் 13ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டதை அடுத்து விரைவில் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
 
சுந்தர்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால் ஜோடியாக மீண்டும் தமன்னா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் வில்லனாக கபீர் சிங் நடித்து உள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, யோகிபாபு, சாயாசிங், ராம்கி, பழ கருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது

Here we go....#Action #ActionTeaser#ActionTeaserFromSep13@VishalKOfficial #SundarC @tridentartsoffl @tamannaahspeaks @hiphoptamizha @AishwaryaLeksh4 @iYogiBabu @sureshsubha @anbariv @khushsundar @dudlyraj pic.twitter.com/wSHzKNIrlu

— Vishal (@VishalKOfficial) September 11, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "இதுவரை பார்த்திராத ஃபிட்டான ரஜினி" - ஹிட்டான செகண்ட் லுக்!