Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டி கதைக்கு குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு மாணவர்கள் - வைரல் வீடியோ இதோ!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:28 IST)
தளபதி விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே மீதம் இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என படக்குழுவினர்களிடமிருந்து தகவல் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
 
கல்லூரி பேராசிரியாக விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவரது மாணவராக சாந்தனு நடித்துள்ளார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக இப்படத்தின் முதல் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த பிப்ரவரி 14ம் தேதி "குட்டி கத" என்ற இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியிருந்தது. 
 
விஜய் தனது மாணவர்களுக்கு வாழ்க்கை குறித்து அட்வைஸ் செய்யும் வகையில் உள்ள இந்த பாடல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது வித்யாமின்றி அனைவருக்கும் பிடித்துவிட்டது. கியூட்டான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த பாடல் தற்போது அனைவரது பேவரைட் லிஸ்டிலும் இடம்பெறுள்ளது. இந்நிலையில் தற்போது "குட்டி கத" பாடலுக்கு வெளிநாட்டு மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இனம் மற்றும் மொழியின் எல்லைகளைத் தாண்டி பயணித்தது வரும் குட்டி கத பாடல் தற்போது வரை 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments