Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடன் படத்தின் மேக்கிங் வீடியோ... வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்திய ராணா!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (12:10 IST)
தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
 
சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் வெளியான இப்படத்தின் செகண்ட் லுக்  போஸ்டர் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்த நிலையில் சற்றுமுன் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ராணாவின் கேரக்டர் உருவான விதம் குறித்து தத்ரூபமாக எடுத்துள்ளனர். படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவிருப்பாத்து குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments