Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கௌதம் மேனனை விமர்சித்து ட்வீட் செய்த இளம் இயக்குநர்

Advertiesment
கௌதம் மேனனை விமர்சித்து ட்வீட் செய்த இளம் இயக்குநர்
, புதன், 28 மார்ச் 2018 (10:58 IST)
தமிழில் 'துருவங்கள் 16' என்ற படத்தின் மூலம் மிக இளம் வயதில் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இவரது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்து, அனைவராலும் பாராட்டப்பட்டவர். கார்த்திக் நரேன் தற்போது 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். இதனை தொடர்ந்து கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார் கார்த்திக் நரேன். இது திரையுலகினர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
கௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைக் குறிப்பிட்டு "பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன்.  ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும்  இப்படி ஏமாற்றாதீர்கள்" என கார்த்திக் நரேன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்சராஹாசனுக்கு கமல் கூறிய அறிவுரை