Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழனா? தன்மானம் உள்ளவனா?; ரஜினியை விளாசிய பொன்முடி : ரசித்து சிரித்த ஸ்டாலின்

Advertiesment
தமிழனா? தன்மானம் உள்ளவனா?;  ரஜினியை விளாசிய பொன்முடி : ரசித்து சிரித்த ஸ்டாலின்
, திங்கள், 26 மார்ச் 2018 (11:11 IST)
ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மாநாட்டில் நடிகர் ரஜினியை முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி ஒருமையில் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திமுக மண்டல மாநாடு கடந்த 24ம் தேதி ஈரோட்டில் தொடங்கியது. அதில், திமுக செயல்தலைவர், அன்பழகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஏராளமான திமுக தொண்டர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
 
அந்த மேடையில் பேசிய திண்டுக்கல் லியோனி ரஜினியை கிண்டலடித்தார்.  ரஜினி இன்னும் கட்சியே துவங்கவில்லை. அதற்குள் 234 தொகுதிகளிலும் போட்டி என்கிறார். இது என்ன கொடுமை? மாற்றி மாற்றி பேசி அவரது ரசிகர்களையும் குழப்பி வருகிறார். தொண்டர்களே இல்லாமல் அவர் கட்சியை தொடங்குகிறார் என கிண்டலடித்தார்.
webdunia

 
அவருக்கு அடுத்து பேச வந்த திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பேல் பேசி ரஜினியை வம்புக்கிழுத்தார்.  ‘எங்களோடு நீ நீட் போராட்டத்துக்கு வந்தாயா? ஜி.எஸ்.டியை எதிர்த்தாயா? தமிழனா? தன்மானம் உள்ளவனா? மானம் கெட்டவனே என ஒருமையில் பேசினார். அதைக் கண்டு ஸ்டாலின் புன்முறுவல் பூத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம்: களத்தில் குதித்த கல்லூரி மாணவர்கள்