Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதில் பா.ஜ.க கைதேர்ந்தவர்கள்; நடிகர் பிரகாஷ்ராஜ்

Advertiesment
மத்திய அரசு
, திங்கள், 26 மார்ச் 2018 (11:54 IST)
கர்நாடகாவில் மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர் அடுத்தவர்கள் மீது அந்த பழியை போடுவது ஏன் என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். தனது வித்தியசமான நடிப்பின் முலம் அனைத்து மொழி மக்களின் மனதை கவர்ந்தவர் . இவர் சமீபகாலமாக பிரதமர், பாஜக அமைச்சர்கள், நிர்வாகிகள் என அனைவரையும் விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடகாவில் லிங்காயத்துக்களை தனி மதமாக அறிவித்தது. 
 
இதனையடுத்து மக்களை காங்கிரஸ் அரசு மதத்தால் பிரிப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். பாஜக வினரின் குற்றச்சாட்டை விமர்சிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு ட்வீட் செய்துள்ளார். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில்  கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள்.
webdunia

மக்களை மத, இன ரீதியாக மக்களை பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரகாஷ்ராஜின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்ற தடை மீறி டெல்லியில் நடந்த சசிகலா புஷ்பா திருமணம்..