Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்தில் நடிக்கிறாரா இந்த யுடியூப் பிரபலம்?

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (07:26 IST)
விஜய் நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். சமீபத்தில் சஞ்சய் தத், லியோ ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் பிரபல யுட்யூப் உணவு விமர்சகரான இர்பான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதை உறுதிப் படுத்துவது போல இர்பான் காஷ்மீரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் இருந்து விலக போவதாக துஷாரா விஜயன் திடீர் அறிவிப்பு. . என்ன காரணம்?

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படத்தில் நாசர்.. ஆனால் நடிகராக அல்ல..!

’பிதாமகன்’ இரண்டாம் பாகமா? ‘வணங்கான்’ டிரைலரை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments