Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அல்லு அர்ஜுன் vs ஃபஹத் பாசில்… பெங்களூவில் புஷ்பா 2 ஷூட்டிங்!

அல்லு அர்ஜுன் vs ஃபஹத் பாசில்… பெங்களூவில் புஷ்பா 2 ஷூட்டிங்!
, செவ்வாய், 21 மார்ச் 2023 (09:30 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இப்போது பெங்களூருவில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் மோதும் ஆக்‌ஷன் காட்சிகளை இயக்குனர் சுகுமார் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி கதையில் சிம்பு வந்தது எப்படி? சுவாரஸ்ய தகவல்!