Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லியோ படத்துக்காக உருவாகும் ஏர்போர்ட் செட்.. பரபரப்பாக நடக்கும் வேலை!

லியோ படத்துக்காக உருவாகும் ஏர்போர்ட் செட்.. பரபரப்பாக நடக்கும் வேலை!
, செவ்வாய், 21 மார்ச் 2023 (08:38 IST)
விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு மோசமான வானிலை காரணமாக மிகுந்த சிரமத்தை சந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் கௌதம் மேனன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ். சமீபத்தில் சஞ்சய் தத், லியோ ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.

விரைவில் காஷ்மீர் ஷூட்டிங் முடியவுள்ள நிலையில் படக்குழு சென்னை வர உள்ளது. அதன் பின்னர் 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு ஐதராபாத்தில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதற்காக ஏர்போர்ட் செட் ஒன்று பிரம்மாண்டமாக போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்னேஷ் சிவன் & பிரதீப் படத்தில் நயன்தாராவும் இருக்காரா? லேட்டஸ்ட் தகவல்!