Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Fit And Agile - மீண்டும் பைக் சுற்றுப் பயணத்தில் அஜித் -வைரல் போட்டோ

Advertiesment
ajithkumar

Sinoj

, செவ்வாய், 19 மார்ச் 2024 (17:41 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
 
இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் அர்ஜைபஜானில் தொடங்கியது. இதில் அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
 
அடுத்தகட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கும் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இப்படம் தற்போது லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் 2 வது கட்ட ஷூட்டிங் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய லைகா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
சமீபத்தில் நடிகர் அஜித்குமார்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அதில்,  நடிகர் அஜித்திற்கு, காதுக்கும் மூளைக்கும்  இடையே நரம்பில் சிறிய கட்டி ( வீக்கம்) இருப்பது கண்டறியப்பட்டது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது என்று மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
 
எனவே நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா  நடிகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறினர்.
 
இதிலிருந்து பூரண குணமடைந்த நடிகர் அஜித்குமார், மீண்டும் தனது பைக் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதே பழைய உற்சாகத்துடனும் புன்னகையுடனும்  உள்ள நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!