சச்சினின் மகன் என்பதால் அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில் ஏலத்தின் கடைசி நபராக அர்ஜூன் தெண்டுல்கர் ஏலம் விடப்பட்டார். அவரை அடிப்படை விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.20 லட்சத்திற்கு வாங்கியது. இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.  இந்த அணிக்காக சச்சின் விளையாடியதும், இப்போது அவரே அந்த அணிக்கு பேட்டிங் ஆலோசகராக இருப்பதும் அவரை எடுக்க காரணம் என்றும் சர்ச்சைகள் எழுந்தன.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் பாலிவுட் இயக்குனரான பர்ஹான் அக்தர் அர்ஜுனைப் பற்றி நான் இதை சொல்லவேண்டும். நானும் அவரும் ஒரே ஜிம்மில்தான் பயிற்சி செய்கிறோம். அவர் தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் கிரிக்கெட்டி சாதிக்க எவ்வளவு உத்வேகமாக இருக்கிறார் என்பதையும் நான் பார்த்துள்ளேன். அவர் மீது சொல்லப்படும் வாரிசு எனும் வார்த்தை மிகவும் கொடுமையானது.  அவரது உற்சாகத்தைக் கொன்று, ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.