நேற்று சென்னையில் ஐபிஎல்-14 வது சீசன் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. முக்கிய வீரர்களை 8 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடிகள் கொடுத்து எடுத்தனர். மோரிஸ் ஜெமிசன், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட லிஸ்டில் 292 க்கும் அதிகமானவர்கள் மட்டுமே எடுக்கப்பட்டனர். முக்கியவீரர்கள் இம்முறை ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சூதாட்டப் புகாரில் சிக்கி சில ஆண்டுகாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், இம்முறை எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை.
.இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா இன்று தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவிட்டிருந்தார். இப்படத்திற்குக்க் கீழ் ஸ்ரீசாந்த் என்னை ஏலத்தில் எடுங்க என வேண்டுகோள் விடுப்பது போல் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பதிவிடுவருகின்றனர்.