யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷாவிடம் ஏன அவரை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி விட்டீர்கள் என கேட்டுள்ளனர் ரசிகர்கள். 
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	இளையராஜாவின் இளையமகனான யுவன் ஷங்கர் ராஜா 2014 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தை தழுவியதாகவும் தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அறிவித்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஷாப்ஃப்ரூன் நிஷா என்ற ஆடை வடிவமைப்பாளரைத் திருமணம் செய்துகொண்டார்.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் அவர் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பல ரசிகர்களும் ‘ஏன் இளையராஜாவின் மகனை மதம் மாற்றினீர்கள்?’ எனக் கேட்க, அதற்கு அவர் ‘ 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்த பிறகுதான் எனக்கு அவரைத் தெரியும். மேலும் அவர் மிகப்பெரிய கேள்விகளுக்கான விடையை இஸ்லாமில் கண்டுகொண்டுள்ளார். எங்களுடைய ஒரே எண்ண அலைவரிசைகளால் நாங்கள் இணைந்திருக்கிறோம். வெறுப்பவர்கள் வெறுக்கட்டும், ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ’ எனக் கூறினார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	ஆனாலும் விடாமல் மீண்டும் மீண்டும் ரசிகர்கள் அதே கேள்வியைக் கேட்க ‘மக்கள் எப்படி இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்கள்?’ என தனது அதிருப்தியை வெளியிட்டார்.