Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளை நிறைவு செய்த ‘பிரேமம்’ திரைப்படம்… சமூகவலைதளங்களில் 90ஸ் கிட்ஸ் நாஸ்டால்ஜியா!

vinoth
வியாழன், 29 மே 2025 (12:48 IST)
’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்தில் அறிமுகமான அனுபமா, சாய் பல்லவி மற்றும் மடோனா ஆகிய மூவருமே இன்று முன்னணி நடிகைகளாக உள்ளனர். பிரேமம் படம்தான் வெகுஜன ரீதியாக தமிழ்- மலையாள சினிமா பிணைப்புக்கு ஒரு முக்கியமானக் காரணமாக அமைந்தது என சொல்லலாம்.  ஆட்டோகிராஃப் என்ற படத்தில் நாம் ஏற்கனவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், அதை சொன்னவிதம் இளைஞர்களைப் பெரியளவில் கவர்ந்தது. அதன் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் மலையாளப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

இதன் காரணமாக மலையாள சினிமாவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சந்தை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. இந்நிலையில் பிரேமம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் நினைவுகூர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்! - திரைத்துறையினர் அதிர்ச்சி!

ட்விட்டரில் திடீரென டிரெண்ட் ஆகும் AK64.. பூஜா ஹெக்டே, நயன்தாரா ஹீரோயின்கள்.. இயக்குனர் யார்?

ஒரே ஒரு டீசர்தான்… பெரிய தொகைக்கு முடிந்த ‘தலைவன் தலைவி’ ஓடிடி வியாபாரம்!

5 தமிழ்ப் படங்கள்… ஒரு பிறமொழிப் படம்… நாளை ரிலீஸாகும் 6 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments