கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? சிவராஜ்குமார்

Mahendran
வியாழன், 29 மே 2025 (11:31 IST)
கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? என கன்னட நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
’தக்லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறிய “கன்னடம், தமிழிலிருந்து உருவானது” என்ற கூற்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் சிலர் ’தக்லைஃப்’ படத்தின் விளம்பரங்களை கிழித்தனர்.
 
இந்த விவகாரத்தை தொடர்ந்து, கமல்ஹாசன் விளக்கமளித்தார். “மொழி பற்றிய வரலாற்று ஆய்வாளர்கள் சொல்லியதைத்தான் மேற்கொண்டேன். சிலர் இதைக் அரசியல் நோக்கத்தில் விமர்சிக்கின்றனர். உண்மையான அன்பிற்கு மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியமில்லை,” என்றார்.
 
இந்த நிலையில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது: “கமல்ஹாசனை எதிர்த்து பேசும் முன்னே, நீங்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். ஒரு சர்ச்சையின் நேரத்தில் மட்டும் குரல் கொடுக்காமல், எப்போதும் கன்னட மொழிக்காக அக்கறையுடன் செயல்பட வேண்டும்.” என்றார்.
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலக காரணம்: பரபரப்பு தகவல்கள்

இதுதான் கெமிஸ்ட்ரியா? ‘தேரே இஸ்க் மெய்ன்’ போஸ்டரை வெளியிட்டு அப்டேட் கொடுத்த தனுஷ்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’! டிரெய்லரில் சும்மா தெறிக்க விடுறாங்களே

ஆடுஜீவிதம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த தமிழ் நடிகரா? சேரன் கொடுத்த ஷாக்

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments