இன்று மதியம் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது அறிவித்தார்.
இதைனையடுத்து, மத்திய அரசிற்கு ரஜினிகாந்த் நன்றி கூறி..இந்த விருதை தனது ரசிகர்களுக்கு சமர்பிப்பதாகக் கூறினார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு சக நடிகர்கள், இயக்குநர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,. மூன்று தலைமுறைகளின் முடிசூடா மன்னனாகத் திகழும் எனதருமை சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்திற்கு தாதா சாஹேப் பால்கே விருது கிடைத்தமைக்கு உண்மையிலேயே பெருமை கொள்கி்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கலைஞன் என்பவன் மக்களை தன் பக்கம் ஈர்க்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா வர்த்தகத்தை உலகளவில் உயர்த்தியவர் திரு ரஜினிகாந்த். அவர் தனது ஷ்டைலான உடல்மொழி மற்றும் திறமையான நடிப்பாலலும் வசன உச்சரிப்பாலும் மக்களை கவர்ந்தவர். அப்படிப்பட்ட கலைஞனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது உயரிய விருது கிடைத்துள்ளதற்கு எனது வாழ்த்துகள்.