Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழில் ரீமேக் ஆகும் பதாய் ஹோ… ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஒப்பந்தம்!

தமிழில் ரீமேக் ஆகும் பதாய் ஹோ… ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஒப்பந்தம்!
, செவ்வாய், 2 மார்ச் 2021 (06:59 IST)
பதாய் ஹோ படத்தின் ரீமேக்கில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் பார்வைக்கு சென்ற வலிமை மோஷன் போஸ்டர்… ரிலீஸ் எப்போது?