தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்தவர் கே.வி.ஆனந்த். இவர் இன்று மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவால் சினிமாத்துறையினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், அவரது இயக்கத்தின், அயன், காப்பான்,மாற்றான் போன்ற படங்களில் நடுத்திருக்கும் சூர்யா தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், கேவி.ஆனந்த் சார் இது பேரிடர் காலம் என்பதை அறிந்து உங்கள் மரணம் நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்ற உண்மை, மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. நீங்கள் எடுத்த புகைப்படங்களினால்தான் சரவணன் சூர்யாவாக மாறிய அந்த அற்புதமான தருணங்கள் நிகழ்ந்தது.
அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடிக்க நீங்க மணிநேரம் கொட்டிய உழைப்பை வியந்து பார்க்கிறேன்.
நேருக்கு நேர் படத்திற்காக நீங்கள் எடுத்த ரஷ்யன் ஆங்கில் புகைப்படம் தான் இயக்குநர் திரு.வசந்த் தயாரிப்பாளர் மணிரத்னத்திற்கு என் மீது நம்பிக்கை வரக் காரணம்.உங்கள் கேமராவால் என் எதிர்காலம் பிரகாசமானது.
இயக்குநராக நீங்கள் அயன் படத்தின் வெற்றிக்காக உழைத்தபோது வெற்றிக்காக காத்திருந்த எனக்கு புது உத்வேகம் அளித்ததோடு. இப்படம் என்னை அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக உயர்த்தியது. என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். எங்கள் நினைவில் நீங்கள் என்றும் வாழ்வீர்கள் இதயப்பூர்வமான நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.