Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கே வி ஆனந்த் மறைவு – இயக்குனர் ஷங்கர் இரங்கல்!

Advertiesment
கே வி ஆனந்த் மறைவு – இயக்குனர் ஷங்கர் இரங்கல்!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:26 IST)
ஒளிப்பதிவாளரும் முன்னணி இயக்குனருமான கே வி ஆனந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தடுத்து மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடன் பல படங்களில் பணியாற்றிய இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளத்தில் ‘அதிர்ச்சியான செய்தி… இதயம் வலிகளாலும் பாரத்தாலும் நிரம்பியுள்ளது. என்னால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பரையும் ஒளிப்பதிவாளரையும் இழந்துவிட்டேன். ஈடு செய்ய முடியாத இழப்பு. என்றென்றும் உங்கள் இன்மையை உணர்வேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் நடிகர் செல்லதுரை உடல்நல குறைவால் மரணம்! – அடுத்தடுத்த அதிர்ச்சியில் திரையுலகம்!