பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பால் காலமானார் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன்னர் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
பிரபல இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தடுத்து மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கேவி ஆனந்த் அவர்களின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாகவும் ஆனால் அவர்கள் இருவருக்கும் லேசான பாதிப்பு என்பதால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்ததால் கேவி ஆனந்த் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படவில்லை என்றும், மருத்துவமனையில் இருந்து நேராக பெசன்ட்நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது.