Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கும் ‘பகாசூரன்’… ரிலீஸ் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!

செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜி இயக்கும் ‘பகாசூரன்’… ரிலீஸ் பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!
, புதன், 1 ஜூன் 2022 (11:17 IST)
திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு பகாசூரன் என்று அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. மேலும் படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரவிந்த் சாமி நடிக்கும் கள்ளபார்ட்… வெளியான சென்சார் தகவல் & ரிலீஸ் தேதி!