Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாணிக்காயிதம் நான் நடித்ததிலேயே வித்தியாசமான படம்… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கருத்து!

Advertiesment
சாணிக்காயிதம் நான் நடித்ததிலேயே வித்தியாசமான படம்… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த கருத்து!
, புதன், 27 ஏப்ரல் 2022 (09:47 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக ஆக்‌ஷன் ரோலில் நடித்துள்ள திரைப்படம் சாணிக்காயிதம்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளனர். மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதல் முதலாக ஒரு ஆக்‌ஷன் ரோலில் நடித்துள்ளார். படத்தில் பெண் காவலராக அவர் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசுகையில், “இது வரை நான் நடித்த கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை பாணியை சாணி காயிதம் கொண்டுள்ளது. எனக்கு இதுவரை அனுபவம் இல்லாத அதே சமயம் உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய பாத்திரமும், இயக்குநர் அருணின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும் இந்த கடினமான படத்தின் ஒரு பகுதியாக இருக்க என் ஆர்வத்தைத் தூண்டியது. அதற்கு மேலாக, இயக்குனர் செல்வராகவன் உடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு மேலும் சிறப்பைச் சேர்த்தது! இந்த பாத்திரத்தில் நான் ஆத்மப் பூர்வமாக நடித்துள்ளேன். பிரைம் வீடியோவில் சாணி காயிதத்தை. 6 May முதல், உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என அறிவது மகிழ்ச்சியைத் தருகிறது. பார்வையாளர்களின் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம் டிரைலர்… கதைக்களம் பற்றி வெளியான தகவல்?