Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம் டிரைலர்… கதைக்களம் பற்றி வெளியான தகவல்?

Advertiesment
ரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம் டிரைலர்… கதைக்களம் பற்றி வெளியான தகவல்?
, புதன், 27 ஏப்ரல் 2022 (09:41 IST)
கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் டிரைலர் நேற்று வெளியானது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவனும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளனர். மே 6 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி கவனத்தைப் பெற்றன.

வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ள இந்த படத்தின் கதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ” கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள், அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். பின்னர் இருவரும் இணைந்து பொன்னியின் வாழ்க்கையை சீரழித்தவர்களை பழிவாங்கும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளே சாணிக்காயிதம்” என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே எஸ் ரவிக்குமார் நடிக்கும் கூகுள் குட்டப்பா… ஜாலி “சூரத்தேங்கா” பாடல்!