காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 28 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியான நிலையில் இந்த தாக்குதலை மத வெறுப்பாக திசை திருப்ப வேண்டாம் என தமிழ் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பெஹல்காம் பகுதிக்கு நானும் சுற்றுலா சென்றுள்ளேன், தீவிரவாதிகள் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த நிகழ்விற்கு பின்னால் இன்னும் கூடுதல் கண்காணிப்பு மற்றும் சோதனை உள்ளாக்கப்பட வேண்டிய நிலையில் காஷ்மீர் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது என் இதயம் உடைகிறது.
நமது நாடு மத ரீதியாக அதிகம் பிரிந்து இருக்கும் நிலையில் இந்த தாக்குதலை ஒரு குறிப்பிட்ட மதம் மற்றும் சமூகத்திற்கு எதிரான வெறுப்பாக திசை திருப்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.
இந்த சூழலில் இதை சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்பிற்கு இடமில்லை என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன