ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஹரியானா மாநிலம் கர்னாலில் பிறந்த 26 வயதுடைய இந்திய கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருக்கு திருமணமாகி 7 நாட்கள் மட்டுமே ஆகிறது என்பது கூடுதல் சோகம்.
வினய் நர்வால், திருமணம் ஆன சில நாள்களுக்குள், திருமண விடுப்பில் இருந்து காஷ்மீரில் இருந்தபோது இந்த தாக்குதலில் சிக்கியுள்ளார். அவரது திருமணம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற்றது; ஏப்ரல் 19ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. குடும்பத்துடன் மகிழ்ச்சியில் இருந்த நேரத்தில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த துயரச் சம்பவம், அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த தாக்குதல், இந்தியா ஒரு தைரியமான இளம் வீரரை இழந்துள்ளது. அவரை இழந்த குடும்பத்தாருக்கு நாட்டு மக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.