ஜம்மு-காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா பகுதியாக இருக்கும் பெஹல்காமில், ரிசார்ட் பகுதியை அருகில் வைத்து நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரச் சம்பவத்தில் 26 பயணிகள் தங்களுடைய உயிரிழந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் துணை பிரிவு ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
ஆனால், பாகிஸ்தான் இந்த தாக்குதலுடன் எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது.
உள்ளூர் செய்தி நிறுவனத்துடன் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், "இந்த தாக்குதல் பாகிஸ்தான் காரணமாக இல்லை. இது இந்தியாவில் உள்ள உள்நாட்டு பிரச்சனை. அந்த நாட்டின் பல மாநிலங்களில் அரசுக்கு எதிரான கலவரங்கள், கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.
நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, சத்தீஸ்கர், மணிப்பூர், தெற்கு மாநிலங்களில் இப்படி பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் அரசுக்கு எதிரான விரோதங்கள் தென்படுகின்றன" என்றார்.