தமிழில் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் திவ்ய பாரதி. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. அதனால் சோசியல் மீடியாக்களில் தன்னுடைய கவர்ச்சி படங்களை பதிவிட்டு மிகவும் ஆக்டிவ் ஆகவே இருந்தார். மகாராஜா திரைப்படத்தில் கூட ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வருவார்.
பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருந்த திவ்யபாரதி இப்போது தெலுங்கில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் இயக்குனர் தன்னிடம் வரம்பு மீறி பேசுவதாக அந்த இயக்குனர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறார் திவ்யபாரதி. அதுவும் எக்ஸ் வலைதள பக்கத்தில் தைரியமாக அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் திவ்யபாரதி.
அந்த இயக்குனர் இவரை தெலுங்கில் சிலகா என்றே அழைப்பாராம். பெண்களை சிலகா அல்லது வேறு எந்த வார்த்தையாலும் அழைத்தால் அது நகைச்சுவையாக பார்க்க முடியாது. அது பெண் வெறுப்பிற்கு காரணமாக இருக்கும். இது ஒரு முறை மட்டும் நடந்தது அல்ல. இந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்தில் இதே முறையை தான் பின்பற்றி வருகிறார். அங்குள்ள பெண்களிடம் இப்படித்தான் அவர் அவமதித்து வருகிறார்.
அங்கு இருக்கும் ஹீரோ கூட இதைப் பற்றி ஒன்றுமே கேட்காமல் அமைதி காத்தும் வருகிறார். இது எனக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. பெண்கள் கேளிக்கை ஆளாகாத பணியிடங்களை தான் நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம், இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும் ஒரு பெண்ணாகவும் இது என்னுடைய தரமான நிலை.
அது மட்டுமல்ல அந்த படப்பிடிப்பு குழுவினரிடமும் எனக்கு எப்போதும் பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரே நடிகர் மற்றும் ஒரே படக்குழுவினரிடம் நான் பலமுறை பணியாற்றியுள்ளேன். இதுவரை எந்தவித மனக்கசப்பும் இந்த மாதிரி சம்பவங்களும் நடந்தது இல்லை. இந்த ஒரு இயக்குனர் மட்டுமே எல்லை மீறி அவமரியாதையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இதற்கு பதில் அளிக்க எனக்கு முழு அதிகாரமும் உரிமையும் உள்ளது. நீங்கள் இன்னும் அந்த நடத்தையை ஆதரிக்க விரும்பினால் அது உங்கள் விருப்பம். அதற்காக நான் என்னுடைய தூக்கத்தை இழக்கவில்லை. யாராவது என்னை பற்றி மோசமாக பேச தேர்வு செய்தால் நான் அவர்களுக்கு உண்மையிலேயே நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கும் சேர்த்தே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் திவ்யபாரதி. தெலுங்கில் சிலகா என்றால் கிளி என்று அர்த்தமாம்.