பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் கடந்த 21 ஆம் தேதி ரிலீஸாகி பெருவாரியான வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கடாயு லோஹர் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
லவ் டுடே வெற்றியை அதிர்ஷ்டத்தின் மூலம் கிடைத்த வெற்றி அல்ல என்று ப்ரதீப் ரங்கநாதன் டிராகன் படம் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார். படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு சென்ற ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்கள் இயக்குனர் வைத்திருந்ததாக ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “டிராகன் அழகான படம். மிகச்சிறப்பான எழுத்து. இயக்குனர் அஸ்வத்துக்கு வாழ்த்துகள். எல்லா கதாபாத்திரங்களும் அழகான மற்றும் நிறைவாக உருவாக்கப்பட்டுள்ளன. ப்ரதீப் மீண்டும் ஒருமுறை தானொரு பொழுதுபோக்காளர் மற்றும் மிகச்சிறந்த கலைஞர் என நிரூபித்துள்ளார். அனுபமா மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரின் கதாபாத்திரங்கள் உங்கள் இதயங்களில் இடம்பிடிக்கும். கடைசி 20 நிமிடங்கள் நான் கலங்கிவிட்டேன். ஏமாற்றுதல் அதிகமாகி வரும் உலகில் தேவையான ஒரு செய்தியைக் கூறியுள்ளார்கள்” எனப் பாராட்டியுள்ளார்.