புதுக்கோட்டை மாவட்டம், பிச்சாந்தன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு கபடி வீரர் விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவ கணேஷ் என்பவர் பள்ளியில் சிலம்பம் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவருக்கு கபடி விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்தது.
இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே நேற்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. அந்த போட்டியில், சிவகங்கை அணிக்காக விளையாடிய சிவ கணேஷ், விளையாடி கொண்டிருக்கும் போது திடீரென மயக்கம் வந்ததாக தெரிவித்தார்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்ததாக அறிவித்தனர். 54 வயதான சிவ கணேஷின் திடீர் மரணம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.