Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம்.. தமிழக முதல்வர் வாழ்த்து..!

Advertiesment
இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம்.. தமிழக முதல்வர் வாழ்த்து..!

Siva

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:01 IST)
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஏற்கனவே திருமணம் ஆகி அதன் பிறகு விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் தருண் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் ஏப்ரல் 15 ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக ஷங்கர் திருமண பத்திரிகையை பிரபலங்களுக்கு கொடுத்து வந்த நிலையில் இன்று சென்னையில் சிறப்பாக இந்த திருமணம் நடைபெற்றது. 
 
இந்த திருமணத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பரிசையும் அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் பாடல்.. ‘விசில் போடு’ பாடலை தடை செய்ய புகார்.