Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் பாடல்.. ‘விசில் போடு’ பாடலை தடை செய்ய புகார்.

Advertiesment
போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் பாடல்.. ‘விசில் போடு’ பாடலை தடை செய்ய புகார்.

Mahendran

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:29 IST)
தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் சிங்கிள் பாடலான ’விசில் போடு’ என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் போதைப் பொருளை ஆதரிக்கும் வரிகள் இருப்பதாகவும், குடிமகன்களுடன் கூட்டணி என்ற நேரடியாக விஜய் கூறியிருப்பதாகவும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
 
நடிகர் விஜய் அவர்கள் பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். 
 
தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும், ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!
 
அதிரடி கலக்கட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.
 
மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான் நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகரை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது.
 
இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான், நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் நடிகர் விஜய்.
 
குடிமகன் தான் நம் கூட்டணி, நடிகர் விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை, குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயை திறக்கும் நடிகராக நடிகர் விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்.
 
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி ரூட்டுக்கு மாறும் பிரியங்கா மோகன்… லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!