Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே எக்ஸ்பிரஷன்தான்… ஆனால்? விஜய் ஆண்டனி நடிப்பை விமர்சித்த இயக்குனர் நவின்!

ஒரே எக்ஸ்பிரஷன்தான்… ஆனால்? விஜய் ஆண்டனி நடிப்பை விமர்சித்த இயக்குனர் நவின்!
, வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (17:44 IST)
இயக்குனர் நவின் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள கோடியில் ஒருவன் படம் பற்றி பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் என்ற திரைப்படம இன்று திரைய்ரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்த கோடியில் ஒருவன் திரைப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் என்பவர் இயக்கியிருந்தார். இவர் ஏற்கனவே மெட்ரோ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி நடிப்பின் மேல் வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று. எந்த வகையான சூழ்நிலைக்கும் ஒரே மாதிரி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிகர் என்பதுதான். ஆனால் அந்த குறையை நிவர்த்தி செய்ய அவர் திரைக்கதைகளை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் ஆண்டனியை அக்னி சிறகுகள் படத்தில் இயக்கும் இயக்குனர் நவீன் இதுபற்றி விமர்சனம் செய்துள்ளார்.

கோடியில் ஒருவன் பார்த்த அவர்’ ஒரே எக்ஸ்பிரஷனை வச்சிட்டு ஒரு ஹீரோ ரெண்டு மணிநேரம் நம்மளை போரடிக்காம என்டர்டெயின் பண்றார். அம்மா சென்டிமெண்ட் & விஜய் ஆண்டனி காம்போ எப்பவுமே சூப்பர்ஹிட்தான்னு மீண்டுமொருமுறை கோடியில் ஒருவன் நிரூபிச்சிருக்கு. மாஸ் சீன்லகூட காமெடி அழகா வொர்க்அவுட் ஆகுது. பக்கா தியேட்டர் படம்’ எனப் பாராட்டியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவும் அவுட்டா… நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்கும் அனபெல் சேதுபதி!