Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமல் படத்தை இயக்கிய இயக்குனர் திடீர் மறைவு.. மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!

Advertiesment
நாகேந்திரன்

Mahendran

, சனி, 26 ஏப்ரல் 2025 (16:07 IST)
விமல் நடித்த ‘காவல்’ என்ற படத்தை  இயக்கிய இயக்குநர் நாகேந்திரன், மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரை உலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
'நேற்று தான் அவருடன் பேசினேன், இன்று அவரின் மறைவு செய்தி கேட்டு உள்ளம் உலறிவிட்டது' என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"அன்புள்ள நாகேந்திரன் போன செய்தி என் நாளையே இருண்டடித்துவிட்டது.
நேற்றுவரை நம்முடன் இருந்தவர் இன்று இல்லை என்பதே நம்ப முடியவில்லை.
நொடிகள் என்றால் என்ன, நாட்கள் என்றால் என்ன என்பதை காலம் வலியுறுத்துகிறது.
சகோதரனாகவும் நெருங்கிய நண்பனாகவும் இருந்தவரை இழந்த வேதனை சொல்ல வார்த்தை இல்லை. அவரது குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் வழங்கட்டும். நாகேந்திரனின் ஆன்மா சாந்தியடையட்டும்."
 
விமல், புன்னகை பூவே Geetha, சமுத்திரக்கனி, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்த 'காவல்' என்ற திரைப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகியது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவான இந்த படத்தை நாகேந்திரன் இயக்கினார். படம் பெரிய வரவேற்பைப் பெறாததால், அதன் பிறகு அவருக்கு புதிய வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!