அஜித் நடித்த குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.
வேலை நாட்களில் வசூல் குறைந்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இன்னும் பெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த படத்துக்குக் கணிசமான வசூல் இருக்கும் என தெரிகிறது. இதுவரை தமிழக அளவில் 172 கோடி ரூபாயும், உலகளவில் 250 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ஹிட் படமான வீரம் ரி ரிலீஸாகிறது. அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அதன் புதிய டிரைலர் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.