Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

`தல’ சொன்னது காதுல கேட்டுக்கிட்டே இருக்கு... ஜிப்ரான் உருக்கம்

Advertiesment
`தல’ சொன்னது காதுல கேட்டுக்கிட்டே இருக்கு... ஜிப்ரான் உருக்கம்
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:48 IST)
நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்னு அஜித் சார் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியிருக்கிறார். 
 
வாகைசூடவா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். ஆனால், தனது திறமையால் கமலின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டார் அவர். கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, பாபநாசம், தூங்காவனம், உத்தமவில்லன் என பல படங்கள் சேர்ந்து பணியாற்றிவிட்டார். 
 
இவர் நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கில் நடிகர் அஜித்தைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பு குறித்து மனம்திறந்திருக்கும் ஜிப்ரான். ஒரு உண்மையான அஜீத் ரசிகனின் மனநிலையில் இருக்கிறேன். அவரைப் பற்றிமற்றவர்கள் என்னவெல்லாம் சொல்வார்களோ அதை காட்டிலும் மேலானவராக அஜித் சார் இருக்கிறார். அவர் எவ்வளவோ வார்த்தைகள் என்னிடம் பேசினார். ஆனால், ஒரே ஒரு வார்த்தை என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. `நாம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' என்பதுதான் அது. நன்றிகள்’ என்று உருகியிருக்கிறார் ஜிப்ரான். 
 
அஜித் - ஜிப்ரான் கூட்டணி விரைவில் இணைய வாழ்த்துவோம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக அளவில் டிரெண்டிங் ஆகும் 'கருத்த பெண்ணே'