Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது தான் தல! அஜித்தின் வேற லெவல் சிம்ப்லிஸிட்டி! வைரல் வீடியோ இதோ!

Advertiesment
Thala Ajith
, திங்கள், 25 மார்ச் 2019 (14:56 IST)
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் தல அஜித். அவரின் படங்கள்  ரிலீசாகும் நாள் திருவிழா தான் அந்த அளவிற்கு  திரையரங்கமே விழாகோலம் போல் காட்சியளிக்கும். 
 

 
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நடித்துவந்தவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்து வருகிறார். 
 
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில்  அஜித்திற்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் நடித்துவரும் இப்படம் பெண்களுக்கான சமூக அக்கறையுடனும் , சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால்,  தல அஜித் ஒரு சாதாரண விலை குறைந்த காரில் சீட் பெல்ட் அணிந்து கொண்டு செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும்போது அஜித் தன்  சிம்ப்ளிஸிடியையும் சாலை விதிகளை பின் பற்றும் விதத்தையும் காட்டுவதாக அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேம் ஆஃப் த்ரோன்ஸா... அப்படினா.... - பாகிஸ்தானில் ஒரு டிரியன் லானிஸ்டர்