நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ். முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 198 ரன்கள் சேர்க்க அடுத்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 159 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
நேற்றையப் போட்டியில் குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் இந்த தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்தார். இதன் மூலம் இந்த தொடரில் முதல் முறையாக 400 ரன்களைத் தாண்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். தற்போது ஆரஞ்ச் கேப் அவர் வசம்தான் உள்ளது.
இந்நிலையில் சாய் சுதர்சனின் பேட்டிங்கைப் பாராட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் “நீங்கள் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இப்படியே செயல்படுங்கள். உங்களை இந்திய அணி ஜெர்ஸியில் பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.