Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதம் தொட்டுக் கேட்டுக் கொள்கிறேன்… ராம் போன்ற இயக்குனர் தமிழ்நாட்டிற்குத் தேவை- இயக்குனர் பாலா!

vinoth
வெள்ளி, 27 ஜூன் 2025 (12:38 IST)
ஏழு மலை ஏழு கடல் படத்துக்குப் பிறகு இயக்குனர் ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை இயக்குனர் ராம் தயாரிக்க, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தயாரான நிலையில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டது.

ஜூலை 4 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் கைப்பற்றியுள்ளார். இதையடுத்து படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. நேற்று இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.

அதில் கலந்துகொண்டு இயக்குனர் பாலா பேசியது கவனம் பெற்றுள்ளது. அதில் “நான் விமர்சனர்களின் பாதம் தொட்டு ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு சேருங்கள். ஏனென்றால் ராம் மாதிரி ஒரு இயக்குனர் தமிழ்நாட்டுக்குத் தேவை. இந்த படம் என்னை மிகவும் பாதித்தது” என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கூலி’ தான் கடைசி படம்.. ரெட் ஜெயண்ட் எடுத்த அதிரடி முடிவு?

அஜித்தின் அடுத்த படத்தை அவரே தயாரிக்கின்றாரா? சொந்த காசை செலவு செய்வதால் ஏற்பட்ட சந்தேகம்..!

ரஜினிக்கு கதை சொல்லியுள்ள 4 இயக்குனர்கள்.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?

'மார்கன்' திரைப்படம் மூலம் விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைத்ததா? திரை விமர்சனம்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கண்ணப்பா’ தேறியதா? திரை விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments