Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து என கூறிய இயக்குநர் கைது !

Webdunia
வியாழன், 5 மே 2022 (18:35 IST)
நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் சசிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகை மஞ்ச்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல்குமார் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்  நடிப்பில் உருவான படம் அசுரன். இப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சு வாரியர். இவர் ஏராளமான படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபல மலையாள சினிமா இயக்குநர் சணல் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில்,  நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான  மஞ்சு வாரியார் உயிருக்கு ஆபத்து அதில், கந்து வட்டிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் அவரை வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்நிலையில்,   நடிகை மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சணல் குமார் சசிதரனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் புகாரில், தன் பெயருக்கு கேடு விளைவிக்கு வகையில் சணல் குமார் செயல்படுவதாகவும், தான் செல்லும் இடத்திற்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் அவர்குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த எர்ணாகுளம் காவல்துறை சணால் குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments