இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படத்தில் அமீர் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தார். அதன் பின்னர் அவர் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் மீண்டும் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி 5 தொடருக்காக உருவாகும் நிலம் எல்லாம் ரத்தம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இயக்குனர் அமீர் உறுதி செய்துள்ளார். இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தம் ஆனது என்றும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் அமீர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.