Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தைப் பார்க்க 8 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன்… பிரேமம் இயக்குனர் தகவல்!

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (09:27 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி மிகப் பெரிய புகழ்பெற்ற இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக ‘பிரேமம்’ என்ற படத்தின் மூலம் நாடு முழுவதும் புகழ் பெற்றார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும், சென்னையில் இந்த திரைப்படம் தொடர்ச்சியாக ஒரு வருடம் ஒரே திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அவர் இயக்கி சமீபத்தில் வெளியான கோல்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும், மோசமான வசூலையும் பெற்றது.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் “அஜித் சார், நிவின் பாலியிடம் பிரேமம் படம் நன்றாக இருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பின்னர் நான் 8 ஆண்டுகளாக அவரை சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அது நடக்காததால் நான் நொந்து போய்விட்டேன். அஜித் சாரை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அந்த படம் குறைந்தது 100 நாட்களாக ஓடும் விதமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments