Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.20,000 கோடி வைத்துள்ள ’கொரோனா வைரஸ்’ டிடிவி: சொல்வது யார் தெரியுமா?

Advertiesment
ரூ.20,000 கோடி வைத்துள்ள ’கொரோனா வைரஸ்’ டிடிவி: சொல்வது யார் தெரியுமா?
, புதன், 18 மார்ச் 2020 (10:04 IST)
தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ் என விமர்சித்துள்ளார் புகழேந்தி. 
 
சென்னை இராயப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலம் காட்ந்த வாரம் திறக்கப்பட்டது. அப்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எதிர்வரும் 2020 சட்டமன்ற தேர்தலில் அமமுக தலைமையில் பெரிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறினார்.  
 
மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும், அமமுக தலைமையில் கூட்டணி என்றாலும் தமிழகத்தின் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட இருப்பதாக அவர் தெரிவித்தார். 
webdunia
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விமர்சனங்களை முன்வைத்துள்ளார் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த புகழேந்தி. அவர் கூறியதாவது, கட்சி என்ற பெயரில் தினகரன் செய்த காமெடிக்கு அளவே இல்லை. ஆர்.கே. நகரில் வழங்கிய ரூ.20 டோக்கனுக்கு   அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
 
தமிழக அரசியலில் டிடிவி தினகரன் ஒரு கொரோனா வைரஸ். அவருடன் எந்த கட்சியும் கூட்டணியும் அமைக்காது. தினகரன் ரூ.20,000 கோடி வைத்துள்ளார். அவ்வளவு பணம் இருந்தாலும், மக்களுக்காக எந்த ஒரு நல்லதையும் செய்ய மனசு வராத கூட்டம் அது என்று விமர்சித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோறு இல்ல; உப்பு தண்ணி தான் குடி தண்ணி: தனித்தீவில் தவிக்கும் தமிழக மீனவர்கள்!