Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொழி தெரியாததால் பாக்யராஜுக்கு நேர்ந்த சோகம்

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (09:04 IST)

ஔடதம் படத்தின் படக்குழு சந்திப்பில் பேசிய நடிகர் பாக்யராஜ், தான் மொழி தெரியாமல் கம்போடியாவில்  ஒரு குற்றவாளியைப் போல் தவித்ததாக கூறினார்.
 


விழாவில் பாக்யராஜ் மேலும் பேசியதாவது:  ’படக்குழுவினர் ' தமிழா தமிழில் கையெழுத்திடு' இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழில் தான் எப்போதும் நான் கையெழுத்து போடுவேன்.  நான் சீனா போனபோது அங்கு ஆங்கிலமே இல்லாமல இருக்கிறார்கள். 

அவர்கள் எல்லாவற்றிலும் முன்னேறித்தான் இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசும் ஆட்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் .நான் அங்கு போயிருந்த போது தகவல் தொடர்புக்கு சிரமமாக இருந்தது. அண்மையில் ஒரு தெலுங்குப்படத்தின் படப்பிடிப்புக்கு கம்போடியா போக வேண்டியிருந்தது. அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் தகவல் தொடர்பு பிரச்சினையால் நான் பாதியிலேயே ஊர் திரும்ப வேண்டி இருந்தது.

என் பாஸ்போர்ட்டில் சீல் போட இடமில்லை என்பதுதான் பிரச்சினை. அது மட்டுமல்ல விமான நிலையத்தில் என்னை ஒரு குற்றவாளியைப்போல நடத்தினார்கள்... சில நாடுகளில் தெரிந்தாலும் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள் இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன”. இவ்வாறு பாக்யராஜ் பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments